TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் நடமாடும் ரதங்கள் – வன விலங்கு வாரம்

October 12 , 2019 1746 days 657 0
  • மனித-விலங்கு மோதலைக் கையாளுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உத்தரகாண்ட் வனத் துறை நடமாடும் ரதங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த ரதங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டன. மேலும் இது வனவிலங்கு விழிப்புணர்வு வாரம் தொடர்புடையதாகவும் இருக்கின்றது.
  • மனித - விலங்கு மோதல்கள், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து மக்களுக்கு உணர்த்துவதற்காக அவர்கள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருகின்றார்கள்.
  • உள்ளூர் மக்களுக்கு இது குறித்த திரைப்படங்கள் காண்பிக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனவிலங்குகளைப் பற்றிய கூட்டங்கள் நடத்தப் படும்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோர்கர், சம்பாவத், பவுரி மற்றும் அல்மோரா ஆகிய மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்