TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் - புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்

December 8 , 2023 224 days 225 0
  • முதன்முறையாக, உத்தரகாண்ட் மாநிலத்தின் 18 தயாரிப்புகள் ஒரே நாளில் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
  • இந்த வகையில் இந்தியாவில் உத்தரகாண்ட் இவ்வகையிலான முதல் மாநிலமாகும்.
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் (DPIIT) துறையின் புவிசார் குறியீட்டுப் பதிவுப் பிரிவினால் உள்ளூர் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது.
  • புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள் பின்வருமாறு : பெரினாக் தேயிலை, மாண்டுவா, ஜாங்கோரா, கஹாட் பருப்பு, சிகப்பு அரிசி, பிளாக் பட் (கருப்பு அவரை), மால்டா பழங்கள், அமராந்த் - தண்டு கீரை (ராம்தானா), அல்மோராவின் லக்கௌரி மிளகாய், துவரைப் பருப்பு, புரான்ஷ் ஜூஸ், சிறுகாஞ்சொறி (கண்டலி) இழை, நைனிடால் மெழுகுவர்த்தி, ரங்வாலி பிச்சோடா , ராம்நகரின் லிச்சி, நைனிடாலின் பீச் பழம், சாமோலி முகக்கவசம், உத்தரகாண்ட் மரக் கலை வேலைப்பாடுகள்.
  • இங்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள்: பிரியாணி இலை, பாஸ்மதி அரிசி, போட்டியா டான், ஐபன் கலை, சியுரா எண்ணெய், முன்சியாரி வெள்ளை காராமணிப் பயறு, ரிங்கல் கைவினை பொருள், தம்ரா மற்றும் துல்மா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்