TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் பொது உரிமையியல் சட்ட மசோதா

February 12 , 2024 319 days 357 0
  • பொது உரிமையியல் சட்ட (UCC) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.
  • UCC என்பது திருமணம், விவாகரத்து, பரம்பரைச் சொத்து உரிம மாற்றம் மற்றும் தத்தெடுப்பு மற்றும் பிற தனிப்பட்ட விவகாரங்கள் ஆகியவற்றைக் கையாள்வதில் பல்வேறு மதங்களின் அடிப்படையில் அமையாத, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள்தொகையில் 3 சதவீதத்தைக் கொண்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்த மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
  • மூதாதையர் சொத்துக்கும் சுயமாக வாங்கிய சொத்துக்கும் இடையிலான வேறுபாடு இதில் நீக்கப்பட்டுள்ளது.
  • உயில் எழுதி வைக்காத வாரிசு தொடர்பான சூழலில், குழந்தைகள், விதவை மற்றும் பெற்றோர் ஆகியோரை  உள்ளடக்கிய வகுப்பு-1 வாரிசுகளுக்குச் சொத்துச் சேரும்.
  • வகுப்பு-1 வகை வாரிசுகள் இல்லாத பட்சத்தில், உடன்பிறந்தவர்கள், மருமகள்கள், மருமகன்கள் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரை உள்ளடக்கிய வகுப்பு-2 வகை வாரிசுகளுக்குச் சொத்து சேரும்.
  • மூதாதையர் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை, தத்தெடுப்பதில் சம உரிமை, விவாகரத்து போன்றவற்றை இந்த மசோதா கொண்டுள்ளது.
  • இருதார மணம் அல்லது பலதார மணம் இந்தச் சட்டத்திற்கு புறம்பானது.
  • இது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் உறவுகளுக்கான கட்டாயப் பதிவு/சுய அறிவிப்பு, திருமணங்கள் மற்றும் விவாகரத்து ஆகியவற்றின் கட்டாயப் பதிவு ஆகியவற்றினையும் வழங்குகிறது.
  • UCC ஆனது முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காண குறைந்தபட்சத் திருமண வயதை முறையே 18 மற்றும் 21 ஆக அறிவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்