உத்தரகாண்ட் மாநிலத்தின் பெளரி கர்வால் மாவட்டத்தில் உள்ள துமகோட் பகுதியில் உள்ள மலையின் உயர்மட்டப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அம்மாநிலத்தின் வனத் துறையால் பதிவு செய்யப் பட்ட 998 காட்டுத் தீ சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
மே 06 முதல் 07 வரை மட்டும் 68 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த பருவத்தில், அம்மாநிலத்தில் இதுபோன்ற 773 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்திய விமானப்படை அதன் Mi17 V5 ஹெலிகாப்டர்களை தீயணைப்பிற்காக மேற் கொள்ளப் படும் வானிலிருந்து நீர் தெளிக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பியது.
இந்தச் சிறப்புத் தீயணைக்கும் நுட்பமானது ஹெலிகாப்டருக்கு அடியில் இருந்து ஒரு கொள்கலனைத் தொங்கவிட்டு, அதில் நீர் நிரப்பி, பின்னர் அதை தீ விபத்து மண்டலத்தின் மீது விடுவிப்பதை உள்ளடக்கும்.
அணுக முடியாத பகுதிகளில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தச் செயல்முறை மிக இன்றியமையாதவையாகும்.
காட்டுத் தீயைத் தடுக்க வேண்டி, அரசாங்கம் ‘பைருல் லாவோ-பைசே பாவ்’ (பைன் இலைகளுக்குப் பணம் பெறுதல்) திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.