மனிதன் மற்றும் வன விலங்குகளுக்கு இடையேயான மோதலைத் தடுப்பதற்கு, இனஅபிவிருத்தித்திறன் நீக்குதல் /கருத்தடை திட்டத்தின் ஒரு பகுதியாக மீயொலிகளை (Ultra Sound) வனவிலங்குகளின் மேல் பயன்படுத்துவதற்கு இந்திய வன உயிர் நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் அரசு சான்றளிப்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் முதல் முறையாக, வன விலங்குகளின் மேல் அபிவிருத்திதிறன் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வதற்கு முன் அவை கருவுற்றிருக்கின்றனவா என கண்டறிவதற்காக வன விலங்குகளின் மீது மீயொலிகள் (Ultra Sound) பயன்படுத்தப்பட உள்ளது.
இத்தகு முறையில் இத்தொழிற்நுட்பம் தற்போது காட்டுப் பன்றிகள், குரங்குகள், யானைகள் போன்றவற்றின் கருவுறுதலை கண்டறியப் பயன்படுத்தப்படும்.
மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்துடன் (National Institute of Immunology) இணைந்து இந்திய வன உயிர் நிறுவனம் மேற்கொண்டு வரும் மூன்று வருட திட்டத்தின் ஓர் பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்முறையின் கீழ் மீயொலி பயன்பாட்டின் மூலம் வன உயிரியானது கருவுற்றிருப்பது கண்டறியப்பட்டால் அவற்றின் மேல் கருத்தடை நடைமுறை மேற்கொள்ளப்படாது. அவை தொந்தரவுக்கு உட்படுத்தப்படாமல் வனத்தில் விடப்படும்.