BC சகி எனப் படுகின்ற தொழில்முனைவு மிக்க பெண் வணிகத் தொழில் உதவியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர்.
நாடு தழுவிய அளவிலான பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் BC சகி என்போர் நியமிக்கப் பட்டனர்.
அவர்கள் கிராமப்புறங்களில் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதற்காக பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற சுய உதவிக் குழுக்களின் (SHGs) உறுப்பினர்களாக உள்ளனர்.
BC சகிக்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவில் முன்னணியில் உள்ள நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை முறையே சுமார் 19,000 மற்றும் 10,000 உதவியாளர்களைக் கொண்டுள்ளன.