உத்தரப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர் மாற்றம்
January 1 , 2023
567 days
370
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள இரண்டு இடங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- அந்த 2 இடங்கள்
- கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக் கழகம் 'முண்டேரா பஜார்' என்ற இடத்தின் பெயர் 'சௌரி-சௌரா' எனவும்,
- தியோரியா மாவட்டத்தில் உள்ள 'டெலியா ஆப்கான்' கிராமத்தின் பெயரானது 'டெலியா சுக்லா' எனவும் மாற்றப்பட்டுள்ளன.
- ஒரு கிராமம், சிறுநகரம் அல்லது பெருநகரத்தின் பெயரை மாற்றுவதற்கு, ஒரு நிர்வாக அரசின் உத்தரவு தேவையாகும்.
- ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு வேண்டி பாராளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
Post Views:
370