TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தில் புதையுண்ட பண்டைய நதி

October 5 , 2019 1753 days 726 0
  • கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிகளை இணைக்கும் பிரயாக்ராஜில் (முன்னர் அலகாபாத்) ஒரு பழமையான, வறண்ட நதியை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அகழ்ந்து கண்டறிந்துள்ளது.
  • தூய்மையான  கங்கை நதிக்கான தேசியத் திட்டமானது (National Mission for Clean Ganga - NMCG) இதை நிலத்தடி நீரை மேலும் பெருக்குவதற்கான ஆதாரமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • புதையுண்ட இந்தப் "பழங்கால நதியானது" சுமார் 4 கி.மீ அகலமும் 45 கி.மீ நீளமும் மண்ணின் கீழே 15 மீட்டர் தடிமன் கொண்ட அடுக்கையும் கொண்டிருக்கின்றது.
  • புராண காலத்திய சரஸ்வதி நதி இருந்திருக்கலாம் என்று செயல்பாடற்ற நதி தொடர்பான எச்சங்களின் (பேலியோ சேனல்) சான்றுகள் தெரிவிக்கின்றன.
  • ஒரு பேலியோ சேனல் என்பது ஒரு செயலற்ற நதி அல்லது நீரோடைக் கால்வாயின் எச்சமாகும். இது இளம் அல்லது புதிய வண்டல் மண்ணால் புதையுண்டிருக்கின்றது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது கடந்த டிசம்பரில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற – தேசியப் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்