TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேச மதராஸா கல்வி சட்டம்

November 9 , 2024 16 days 103 0
  • உச்ச நீதிமன்றம் ஆனது, 2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மதராஸா கல்விச் சட்டத்தின் (மதராஸா சட்டம்) அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்தது.
  • ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தினை மீறுவதால் மதராஸாக்கள் உயர் கல்விப் பட்டங்களை வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • இந்த வழக்கு ஆனது அஞ்சும் காத்ரி & மற்றவர்கள் Vs இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
  • மார்ச் 22 ஆம் தேதியன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆனது இந்தச் சட்டத்தினை "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும், மதச்சார்பின்மைக் கொள்கையை மீறச் செய்வதாகவும் அறிவித்தது.
  • மதராஸாக்கள் இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் முக்கிய மதச்சார்பற்றக் கல்வி ஆகிய இரண்டிலும் சமயக் கல்வியை வழங்குகின்றன.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு மதராஸா சட்டம் ஆனது ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது உத்தரப் பிரதேச மதராஸா கல்வி வாரியத்தினை (வாரியம்) நிறுவியுள்ளது என்ற நிலையில் இந்த வாரியமானது அதற்கானப் பாடத் திட்டங்களையும் நன்கு தயாரித்து தீர்மானித்து, அனைத்து படிப்புகளுக்கும் தேர்வுகளை நடத்துகிறது.
  • இந்தச் சட்டம் மதராஸா கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுக்கு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்