உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதரசா கல்வி வாரியச் சட்டம், 2004
April 18 , 2024 269 days 285 0
2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில மதரஸா கல்வி வாரியச் சட்டமானது “அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது” என்று அறிவித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு ஆனது இந்த (மதராஸா) கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலக் கல்விக்கு இடையூறாக இருக்கும்.
"மதச்சார்பின்மைக் கொள்கை" மற்றும் அரசியலமைப்பின் 14வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அரசியலமைப்பிற்குப் புறம்பானது எனக் கருதியது.
மதராசா பாடத் திட்டத்தை ஆய்வு செய்த நீதிமன்றம் ஆனது, இந்தச் சட்டம் "1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 22வது சட்டப் பிரிவினை மீறுவதாக உள்ளது" என்று கூறியது.
அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 16,513 அங்கீகரிக்கப்பட்ட மதராஸாக்கள் மற்றும் 8,449 அங்கீகரிக்கப்படாத மதராஸாக்கள், சுமார் 27 லட்சம் மாணவர்களுக்குக் கல்வி அளிக்கின்றன.
அங்கீகரிக்கப்பட்ட 16,513 மதராசாக்களில், 558 மதராஸாக்களுக்கு மாநில அரசால் முழுமையாக நிதியளிக்கப் படுகின்றன என்ற நிலையில் இந்த மதரஸாக்களில் சுமார் 9,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட மற்ற மதரஸாக்கள் அரசு உதவிகளைப் பெறும் தனியார் நடத்தும் மதரஸாக்கள் ஆகும்.
உத்தரப் பிரதேச மதரஸா கல்விச் சட்டமானது 2004 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது என்ற வகையில் அதற்கான வாரியம் ஆனது 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.