TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேச ஸ்தாபன தினம் 2025

January 27 , 2025 27 days 91 0
  • 1902 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது ஆக்ரா மற்றும் அவாத் ஐக்கிய மாகாணங்களாக நிறுவப்பட்டன.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த ஐக்கிய மாகாணங்கள் 1947 ஆம் ஆண்டில் ஒரு நிர்வாக அலகாக மாற்றப் பட்டதோடு 1949 ஆம் ஆண்டில் தெஹ்ரி கர்வால் மற்றும் ராம்பூர் ஆகிய சுதேச மாநிலங்கள் அதில் இணைக்கப்பட்டன.
  • இறுதியாக, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று, இந்த மாநிலமானது உத்தரப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.
  • ஆனால் உத்தரப் பிரதேச தினமானது முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டில், இந்த மாநிலத்தின் மலைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, முதன்முதலில் உத்தராஞ்சல் என்று பெயரிடப்பட்டு, பின்னர் உத்தரக்காண்ட் என மறுபெயரிடப்பட்ட ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்