மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பானது தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சுதேசி அறிவியல் இயக்கமான விஜ்னானா பாரதி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மையானது பழங்குடியினச் சமூகத்தினருக்கான வருமான உருவாக்கம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உன்னத் பாரத் அபியான் என்ற திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தலைமைத் திட்டமாகும்.
ஐஐடி-தில்லியானது உன்னத் பாரத் அபியானின் சார்பாக தேசிய ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகின்றது.