தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவானது (NBCC - National Biofuel Coordination Committee) இந்திய உணவுக் கழகத்திடம் (FCI - Food Corporation of India) இருக்கும் உபரி அரிசியை எத்தனால் (Ethanol) தயாரிப்பில் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
எத்தனால் கை காப்பான் திரவத்தில் பயன்படுத்தப் படுகின்றது.
NBCCன் கீழ் உபரி அரிசியானது எத்தனால் கலந்த பெட்ரோல் உற்பத்தி செய்யும் திட்டத்திற்குப் பயன்படுத்தவும் இது முடிவு செய்துள்ளது.
இந்த முடிவானது தேசிய உயிரி எரிபொருள் கொள்கை, 2018 உடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது.
இக்கொள்கையின் கீழ், ஒவ்வொரு பயிர் அறுவடைக் காலத்தின் போதும், மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிக உபரியாக உள்ள உணவு தானியங்கள் எத்தனாலை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப் படலாம்.
புதைபடிம எரிபொருள் எரிப்பின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், விவசாயிகளுக்கு சரியான வருமானத்தை வழங்குதல், கச்சா எண்ணெய் இறக்குமதிகளுக்கு மானியம், அந்நியச் செலாவணி சேமிப்பை அதிகரித்தல் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்கிட வேண்டி பெட்ரோலில் எத்தனால் கலவையை மேற்கொள்வதற்காக இந்திய அரசு 2003 ஆம் ஆண்டில் எத்தனால் கலவைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
99 சதவிதத்திற்கும் மேல் தூய்மையான எத்தனால், பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றது.