TNPSC Thervupettagam

உப்பு ஏரி (Salt lake) உலகக் கோப்பை

June 29 , 2018 2213 days 727 0
  • இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி அமெரிக்காவில் நடைபெற்ற சால்ட் லேக் உலகக் கோப்பை போட்டியில் ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக தன்னுடைய தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • தீபிகா குமாரி வில்வித்தை இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் மிச்சல்லே கிரோப்பென்னை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியானது இந்த ஆண்டின் வில்வித்தைப் போட்டிகளின் சீசன் முடிவில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் சாம்சுன் நகரில் நடைபெற உள்ள வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளது.
  • இதுவரை 6 வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றுள்ள தீபிகா குமாரி 2011, 2012, 2013, 2015 ம் ஆண்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளார். ஆனால் இந்தமுறை உலகக் கோப்பையில் தங்கப் பதக்கத்தினை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்