TNPSC Thervupettagam

உமிழ்வுநிலைப் பட்டியலுக்கு இந்தியா அங்கீகாரம்

November 4 , 2021 991 days 462 0
  • இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியடைந்த நாடுகள் (வரலாற்று ரீதியிலான) வெளியிட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைப் பட்டியலிடுகின்ற, இந்தியப் பருவ நிலை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு வலைதளத்திற்கு இந்தியா அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
  • வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் உமிழ்வுகளில் உள்ள வேறுபாட்டினை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இந்த உமிழ்வுப் பட்டியலானது தயாரிக்கப் பட்டது.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை நிகர கார்பன் கடனைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் படுகின்றன.
  • இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் நிகர கடனைப் பெற்று உள்ளன.
  • எனவே வளர்ந்து வரும் நாடுகளைவிட உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான உயரிய இலக்குகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளிப்பதே நியாயமானது என்று இந்த தரவுத்தளம் குறிப்பிடுகிறது.

குறிப்பு

  • வருடாந்திர அடிப்படையில் கரியமில வாயு உமிழ்வில் இந்தியா 3வது பெரிய நாடாக உள்ளது.
  • இருப்பினும் அதன் வரலாற்று ரீதியிலான உமிழ்வின் அடிப்படையில் அது 6வது பெரிய உமிழ்வு நாடாகவே உள்ளது.
  • தனது மக்கள் தொகை அளவைக் கருத்தில் கொள்கையில் தனிநபர் உமிழ்வில் இது மிகக் குறைவான அளவையேக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்