TNPSC Thervupettagam

உமிழ்வு இடைவெளி அறிக்கை 2022

October 31 , 2022 629 days 323 0
  • "உமிழ்வு இடைவெளி அறிக்கை 2022-இறுதி அறிக்கை" என்ற தலைப்பிலான அறிக்கை என்பது சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் (UNEP) வெளியிடப் பட்டது.
  • உமிழ்வு இடைவெளி அறிக்கைகள், உமிழ்வைக் குறைப்பதற்காக நாடுகள் மேற் கொண்ட உறுதிப்பாடுகளுக்கும், 2100 ஆம் ஆண்டிற்குள் உலக வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை மதிப்பிடுகின்றன.
  • இந்த அறிக்கையானது, 2030 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகள் எந்த அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் பருவநிலை மாற்றத்தின் பேரழிவு மிக்க விளைவுகளைத் தடுக்க அவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தினைப்  பகுப்பாய்வு செய்கிறது.
  • தற்போதையக் கொள்கைகள் 2100 ஆம் ஆண்டில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
  • தற்போதையப் பருவநிலை உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2.4 முதல் 2.6 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை உயர்வை மட்டுமே குறைக்கும்.
  • பாரீஸ் உடன்படிக்கை இலக்குகளை அடைவதற்குப் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் 45 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.
  • சமீபத்திய அறிக்கையானது மின்சாரம், தொழில், போக்குவரத்து மற்றும் கட்டிடத் துறைகள் மற்றும் உணவு மற்றும் நிதி அமைப்புகள் ஆகிய 6 பகுதிகளில் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது.
  • குறைந்த கார்பன் பொருளாதாரத்தினை நோக்கி உலகைக் கொண்டு செல்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும் என்று இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்