TNPSC Thervupettagam

உமிழ்வு இடைவெளி அறிக்கை 2024

October 29 , 2024 32 days 112 0
  • உமிழ்வு இடைவெளி அறிக்கை என்பது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்புத் திட்டத்தின் வருடாந்திர வெளியீடாகும்.
  • மிகவும் அதிகளவில் பசுமை இல்ல வாயுவினை வெளியிடும் ஆறு நாடுகள் ஆனது உலகளாவிய GHG உமிழ்வுகளில் 63% பங்கினை கொண்டுள்ளன.
  • குறைந்த அளவு வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு 3% மட்டுமேயாகும்.
  • சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது 4,140 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (MtCO2e) உமிழ்வுடன் மொத்த GHG உமிழ்வில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் முந்தைய (1850-2022) CO2 உமிழ்வுப் பதிவுகள் ஆனது சீனா (300 Gt CO2 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான) மற்றும் அமெரிக்கா (527 Gt CO2) ஆகிய நாடுகளை விட மிகக் குறைவு ஆகும் (83 Gt CO2).
  • பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆனது, 2023 ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான 57 ஜிகாடன்கள் (Gt) என்ற புதிய உச்ச அளவிற்கு உயர்ந்துள்ளது (2022 ஆம் ஆண்டில் இருந்த அளவில் இருந்து 1.3% அதிகரிப்பு).
  • அடுத்த தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட உறுதிப்பாடுகளில், 2030 ஆம் ஆண்டில் 42% மற்றும் 2035 ஆம் ஆண்டில் 57% என்ற அளவில் வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைக்க உலக நாடுகள் கூட்டாக உறுதியளிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்