TNPSC Thervupettagam

உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம்

February 10 , 2023 657 days 366 0
  • தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது, முந்தைய ஆண்டை விட 2020-21 ஆம் ஆண்டில் 2.1 சதவிகிதப் புள்ளிகள் குறைந்து 46.9% ஆக உள்ளது.
  • இந்திய அளவிலான மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது 25.6 சதவீதத்திலிருந்து 27.3% ஆக ஒரு சிறிய உயர்வினைக் கண்டுள்ளது.
  • மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவைக் கண்ட மிக சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவு பதிவு ஆகியது இதுவே முதல் முறையாகும்.
  • மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவு இருந்த போதிலும், பல்வேறு முக்கிய மாநிலங்களுள் அதிக மொத்தச் சேர்க்கை விகிதம் கொண்ட மாநிலமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது.
  • தமிழ்நாடு மாநிலத்தினை அடுத்து உத்தரகாண்ட் (45.7%) மற்றும் கேரளா (43.2%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • சண்டிகர், புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் முறையே அதிக பட்சமாக 66.1%, 60.8% மற்றும் 47.6% மொத்தச் சேர்க்கை விகிதம் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்