தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது, முந்தைய ஆண்டை விட 2020-21 ஆம் ஆண்டில் 2.1 சதவிகிதப் புள்ளிகள் குறைந்து 46.9% ஆக உள்ளது.
இந்திய அளவிலான மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது 25.6 சதவீதத்திலிருந்து 27.3% ஆக ஒரு சிறிய உயர்வினைக் கண்டுள்ளது.
மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவைக் கண்ட மிக சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவு பதிவு ஆகியது இதுவே முதல் முறையாகும்.
மொத்தச் சேர்க்கை விகிதத்தில் சரிவு இருந்த போதிலும், பல்வேறு முக்கிய மாநிலங்களுள் அதிக மொத்தச் சேர்க்கை விகிதம் கொண்ட மாநிலமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது.
தமிழ்நாடு மாநிலத்தினை அடுத்து உத்தரகாண்ட் (45.7%) மற்றும் கேரளா (43.2%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சண்டிகர், புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் முறையே அதிக பட்சமாக 66.1%, 60.8% மற்றும் 47.6% மொத்தச் சேர்க்கை விகிதம் பதிவாகி உள்ளது.