உயர்கல்வி நிதி முகமை (Higher Education Financing Agency) என்ற வங்கி சாரா நிதி நிறுவனத்தை (Non-Banking Financial Company - NBFC) ஏற்படுத்துவதற்காக கனரா வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திற்கும் வங்கிக்கும் இடையேயான கூட்டு நிறுவனமாக (Joint Venture ) இது செயல்படும்.
முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த முகமையானது பேருதவி புரிகிறது.
இந்த முகமையானது சந்தையில் இருந்தும் பெருநிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமை நிதி (CSR - Corporate Social Responsibility) மூலமாகவும் நிதி திரட்டி அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை முன்னெடுக்கவும் அளிக்கிறது.
இந்த முகமை, ஆராய்ச்சிக் கூட உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு 10 ஆண்டு கடனாக நிதியளிக்கிறது.
இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) , இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIMs) , தேசியத் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பினை மேற்கொள்வதற்காக 20000 கோடி திரட்டும் வகையில் பங்கீட்டுத் தொகையினை உயர்த்தும் வகையில் இந்த முகமை செயல்படுகிறது.