TNPSC Thervupettagam

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - சீர் மரபினருக்கான ஒதுக்கீடு

August 7 , 2024 109 days 177 0
  • வன்னியர்கள் உயர்கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) - சீர் மரபினர் சமூகங்களுக்கான (DNC) சலுகைகளை அதிக அளவில் பெறுகின்றனர்.
  • MBBS படிப்பில், 2018-2022 ஆம் ஆண்டில் MBC-DNC சமூகங்களைச் சேர்ந்த 5,938 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • அவர்களில், 3,354 பேர் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட MBC-DNC மாணவர்களில் சுமார் 56% பேர் வன்னியர்கள் ஆவர்.
  • 2013-22 ஆம் ஆண்டில் காவல் துறை துணை ஆய்வாளர்களுக்கான தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களில், MBC-DNC சமூகத்தினர் எண்ணிக்கை 605 ஆக இருந்தது, அதில் 307 பேர் வன்னியர்கள் ஆவர்.
  • அரசு சட்டக் கல்லூரிகளின் (2018-22) சேர்க்கையில் மொத்தம் 4,962 MBC-DNC தேர்வர்களில் வன்னியர்களைச் சேர்ந்த 2,096 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • MBC-DNC சமூகங்களின் 20% ஒதுக்கீடு ஆனது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்), MBC-DNC மற்றும் பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SCs)/பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (STs) ஆகியோருக்கான 69% ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகும்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் 41 சமூகங்களும், சீர் மரபினர் பட்டியலில் 68 சமூகங்களும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்