TNPSC Thervupettagam

உயர்நிலை கல்விக்காக காலாவதியாகாத ஒற்றை நிதியம்

August 17 , 2017 2661 days 988 0
  • மத்திய அமைச்சரவை இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்காக காலாவதியாகாத ஒற்றை நிதியை உருவாக்கியுள்ளது
  • பிரதம மந்திரியின் தலைமையிலான அமைச்சரவை, இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்காக காலாவதியாகாத ஒற்றை நிதியை “மத்தியமிக் மற்றும் உச்தார் சிக்ஷா கோஷ்” (Madhyamik and Uchchtar Shiksha Kosh - MUSK) என்ற பொதுக் கணக்கை ஏற்படுத்தி அதில் இடைநிலை மற்றும் உயர் கல்விக்கான வரவு செலவுகள் கணக்கு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.
  • நாடு முழுவதிலும் உள்ள இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வியை பெறும் மாணவர்களுக்கு கல்வித் துறையில் உள்ள திட்டங்களின் மூலம் MUSK-ன் நிதியானது பயன்படுத்தப்படும்
  • 2007-ம் ஆண்டுகளுக்கான நிதிச்சட்டம் பிரிவு 136-இன் கீழ் இதற்கான மேல் வரி விதிக்கப்பட்டது.
  • நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் செயல்பாடுகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
  • இந்த MUSK ஆனது இருப்பு நிதியாக, இந்தியாவின் பொதுக் கணக்கில் வட்டி இல்லாத பிரிவில் வைக்கப்படும்.
  • தற்போது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது பெறப்படும் வரியை இடைநிலைக் கல்வியில் பின்வரும் திட்டங்களுக்காக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் திட்டம்.
    • தேசிய அளவில் தகுதி வாய்ந்தோர்க்கு உதவித்தொகைத் திட்டம்
    • இடைநிலை கல்வி பெறும் மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தேசியத் திட்டம்.
  • உயர்கல்விக்கான மேல் வரியானது பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
    • வட்டியில் மானியம், நிரந்தர உதவித் தொகை மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகைத் திட்டம்.
    • ராஷ்ட்ரிய உட்சதார் சிக்ஷா அபியான்
    • தேசிய ஆசிரியர் பயிற்சித் திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்