- தேசிய வன உயிர்களுக்கான மன்றம் சமீபத்தில் 4 இனங்களை சேர்த்துள்ளது.
- வடக்கு நதி டெராபின் ஆமைகள் (Northern River Terrapin) - ஆற்று நீரில் வாழும் இந்த ஆமை இனங்கள் கிழக்கு இந்தியாவில் பாயும் ஆறுகளில் காணப்படுகிறது.
- படைச் சிறுத்தை (Clouded leapord) - இமயமலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) மதிப்பீட்டின் படி படைச் சிறுத்தையானது ‘மறையத்தகு உயிரினங்கள்’ எனும் சிவப்புப் பட்டியலில் வகைபடுத்தப்பட்டுள்ளது.
- அரேபிய கடலின் ஹம்பேக் திமிங்கலம் (Arbian Sea Humpback Whale) - ஓமன் கடற்கரையிலிருந்து அரேபியக் கடலின் வழியாக இந்தியக் கடலோரமாக பயணித்து, இலங்கை வரை இடம்பெயரும்.
- சிவப்புப் பனிக்கரடி - சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படும். IUCN ஆனது இந்த பனிக்கரடியை ‘அருகிவரும் உயிரினங்கள்’ பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது.
உயர் அச்சுறுத்தல் இனங்களுக்காக மத்திய அரசின் மீட்புத் திட்டத்தில் இந்த 4 இனங்களும் அடங்கும்.
- மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்குப் பிரிவின் பரிந்துரையின் படி இவை சேர்க்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசின் நிதி உதவி பெறும் ஒருங்கிணைந்த வனவிலங்கு வசிப்பிடத்தின் வளர்ச்சித் (IDWH - Integrated Development of Wildlife habitation) திட்டத்தின் மூன்று பகுதிகளுள் இதுவும் ஒன்றாகும். இது 2008-09 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.