பெய்ஜிங்கில் உள்ள ஹுவாயிரோ அறிவியல் நகரத்தில், சீனாவின் உயர் ஆற்றல் கொண்ட ஃபோட்டான் மூலமானது (HEPS) வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
HEPS, நிறைவு செய்யப்பட்டதும் உலகின் பிரகாசமான சின்க்ரோட்ரான் கதிர்வீச்சு (SR) மூலங்களில் ஒன்றாக விளங்கும்.
இது சீனாவின் முதல் உயர் ஆற்றல் கொண்ட சின்க்ரோட்ரான் கதிர்வீச்சு மையமாகும்.
HEPS ஆனது அதன் 1.36-கிலோமீட்டர் சுற்றளவிலான சேமிப்புச் சுற்றளவிற்குள் 6 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் வரை எலக்ட்ரான்களை துரிதப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தச் செயல்முறையானது, பல மாதிரிகளில் ஆழமாக ஊடுருவி, நானோமீட்டர் என்ற அளவிலான துல்லிய விவரங்களை வெளிப்படுத்துகின்ற உயர் ஆற்றல் கொண்ட X-கதிர்களை உருவாக்கும்.