உலக சுகாதார அமைப்பானது (WHO), உயர் இரத்த அழுத்தத்தின் பேரழிவு மிக்க தாக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
'உயர் இரத்த அழுத்தம் குறித்த உலகளாவிய அறிக்கை: அமைதியான உயிர்க் கொல்லிக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது.
ஒத்த வயதுடைய 188.3 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
இந்தியர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே சரியான நேரத்தில் இந்த நோய் இருப்பதைக் கண்டறிந்துள்ள நிலையில் அவர்களில் 30 சதவீதம் பேர் அதற்கான சிகிச்சையினைப் பெறுகிறார்கள்.
உலக நாடுகள் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தினால் 2050 ஆம் ஆண்டிற்குள் 76 மில்லியன் இறப்புகளைத் தவிர்க்கலாம்.
இந்தியாவில், உயர் இரத்த அழுத்தம் உள்ள 30 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால், 2040 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 40 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும்.
50 சதவீதக் கட்டுப்பாட்டு விகிதத்தை அடைய, உயர் இரத்த அழுத்தம் உள்ள 67 மில்லியன் மக்கள் திறம்பட்ட முறையிலான சிகிச்சையினைப் பெற வேண்டும்.
140/90 mmHg அல்லது அதற்கும் அதிகமாக இரத்த அழுத்தம் கொண்ட நபர்களின் தரவுகளின் மீதான பகுப்பாய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் ஆனது பக்கவாதம், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.