விமான நிலையங்களின் பன்னாட்டு குழு (ACI – Airport Council International) எனும் அமைப்பால் வெளியிடப்படும் சிறந்த விமான நிலையங்களின் தரவரிசையில் ஆண்டுக்கு 2-5 மில்லியன் பயணிகள் போக்குவரத்து உடைய விமான நிலையங்களின் வகைப்பிரிவில் ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்கள் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக தரவரிசை படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் போக்குவரத்து அளவில் சிறந்த விமான நிலையமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜெய்ப்பூர் விமான நிலையம் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய சேவைக்கான தர விருது (ASQ-Airport Service Quality Award) விமான போக்குவரத்து துறையில் வழங்கப்படும் உயரிய மதிப்புமிக்க விருதாகும்.
வருடாந்திர ACI – ASQ கணக்கெடுப்பில், ஜெய்ப்பூர் விமான நிலையம் முதலிடத்தையும், ஸ்ரீநகர் விமான நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ASQ கணக்கெடுப்பானது, விமான நிலையங்களின் தனிச்சிறப்புடைமையை அளவிடும் உலகின் முக்கிய தரவரிசை அளவீடாகும்.
மேலும், இது விமான நிலையங்களில் பயணிகளின் விமான பயண தினத்தன்றே மேற்கொள்ளப்படும் ஒரே உலகளாவிய கணக்கெடுப்பு முறையாகும்.