- மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT), வெளிநாடுகளுக்கும் மற்ற ஆட்சி எல்லைகளுக்கும் குடி பெயரும் உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களின் (High Net Worth Individuals -HNWIs) வரிகள் சம்பந்தமான விஷயங்களை ஆராய 5 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
- இந்தக் குழு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி மற்றும் வரி ஆராய்ச்சிப் பிரிவின் கூடுதல் செயலாளரான பிரக்யா சஹாய் சக்சேனா என்பவரது தலைமையில் அமைக்கப்படும்.
- இந்த செயற்குழு இடம்பெயரும் உயர் நிகர மதிப்புடைய தனிநபர்கள் சம்பந்தமான வரி விவகாரங்களுக்கான கொள்கை முடிவுகளை பரிந்துரைக்கும்.
- மத்திய நேரடி வரிகள் வாரியம், இடம் பெயரும் உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களை கணிசமான வரி ஆபத்துகள் கொண்டவர்கள் என கூறியுள்ளது. ஏனெனில் அந்த தனிநபர்கள் இந்தியாவில் உள்ள வரி விவகாரங்களுக்காக தங்களை வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எனக் கூறிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
- மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு நிறுவனத்தின் சமர்ப்பிக்கப்படாத ஆய்வுத் தகவல்களின் படி, 2017ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 7000 லட்சாதிபதிகள் வரி ஏதும் கட்டாமல் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிய வருகின்றது.
- இந்த வெளியேற்றம், அரசுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா இந்த வெளியேற்றத்தில் (உயர் நிகர மதிப்பு உடைய தனி நபர்கள்) முதன்மையான நாடாக உள்ளது.
- அந்த ஆய்வுத் தகவல் இந்தியாவின்1 சதவீத பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அந்த நிலவரம் பிரான்சில் 1.3 சதவிகிதமாகவும், சீனாவில் 1.1 சதவிகிதமாகவும் உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம்
- 1963ஆம் ஆண்டு மத்திய வருவாய் மன்றச் சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்ட சட்டப் பூர்வ அமைப்பு மத்திய நேரடி வரிகள் வாரியமாகும்.
- இது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருமான வரித் துறையின் கொள்கைகளை தயாரிக்கும் முக்கிய அமைப்பாகும்.
- இந்த வாரியம் ஒரு தலைவரையும் ஆறு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.