TNPSC Thervupettagam

உயிரணுக்களில் புரதத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறை

October 6 , 2024 48 days 87 0
  • Wntless (WLS) எனும் புரதத்தை உள்ளடக்கிய புதிய செயல்முறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • முதுகெலும்புகள் கொண்ட விலங்குகளின் (முதுகெலும்பிகள்) உறுப்புகளின் பெரும் வளர்ச்சிக்கு இது முக்கியமானது.
  • செல்களுக்குள் புரதங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை நன்கு விளக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.
  • WLS என்பது உயிரணு சவ்வுகளில் காணப்படும் ஒரு புரதம் என்பதோடு Wnt3a எனப் படும் மற்றொரு புரதத்தை வெளியிடுவதற்கு ஒரு முக்கியமான புரதமுமாகும்.
  • Wnt3a உயிரின வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களுக்கு வழிகாட்டும் சமிக்ஞைகளுக்கு உதவுகிறது.
  • புரதங்கள் செல்லில் சரியான இடங்களுக்குச் செல்வதை WLS உறுதி செய்து குடல், நுரையீரல், உள் காது மற்றும் கண்கள் போன்ற உறுப்புகள் சரியாக வளர்ச்சியடைய உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்