TNPSC Thervupettagam

உயிரணு அளவிலான இயந்திர மனிதன் - சின்செல்ஸ் (Syncells)

October 28 , 2018 2092 days 584 0
  • பெரும் எண்ணிக்கையிலான “Syncells” (செயற்கை உயிரணுக்கள்) என்று பெயர் கொண்ட இயந்திர மனிதனை வடிவமைப்பதற்கான முறையை மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த இயந்திர மனிதனை எண்ணெய் அல்லது வாயுக் குழாயின் உட்பகுதியினை கண்காணிக்கவும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் நோயைக் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.
  • அணுநிலை சார்ந்த மெல்லிய, நொறுங்கும் தன்மையுடைய பொருட்களில் இயற்கை முறிவு ஏற்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான “Syncells” - க்களை உற்பத்தி செய்ய முடியும்.
  • முறிவு ஏற்பட்டுள்ள இடங்களைக் கண்டறியக்கூடிய ஆட்டோபெர்பரேஷன் என்ற செயல்முறையைப் பயன்படுத்தி தேவையான அளவு மற்றும் தேவைப்படும் வடிவத்திலான மிகச்சிறிய பாக்கெட்டை (pocket) இதனால் உருவாக்க முடியும்.
  • இந்த பாக்கெட்டிற்குள் தகவலை சேகரிப்பதற்காக மின்னணுத் தொடர்கள் மற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • Syncells-ன் வெளித் தோற்றமானது “கிராபைன்” என்ற இருபரிமாண வடிவமுள்ள கார்பன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்