TNPSC Thervupettagam

'உயிரிப் படலத் தடைகளை' சிதைத்தல்

November 15 , 2024 13 days 70 0
  • இந்திய அறிவியல் கல்விக் கழகத்தின் (IISc) அறிவியலாளர்கள் குழுவானது, மருந்துகள் உடலில் நுழைவதற்கு உதவும் 'உயிரிப் படலத் தடைகளை' சிதைப்பதற்கு ஒரு வழியை உருவாக்கியுள்ளது.
  • நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை 'உயிரிப் படலங்கள்‘ எனப்படும் அச்சு போன்ற அடுக்குகளைத் தங்களைச் சுற்றி வெளியிடுகின்றன.
  • இந்த 'உயிரிப் படலங்கள் ஆனது தடிமனானத் தடைகளாக செயல்பட்டு, மருந்துகளின் நுழைவைக் கட்டுப்படுத்தி, மேலும் பாக்டீரியாக்களை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறனை உருவாக்க உதவுகின்றன.
  • இந்த 'உயிரிப் படலத்’ தடையைச் சிதைப்பதற்கு என்று, அக்குழு பசுவின் செரிமான மண்டலத்தில் உள்ள ஒரு நொதியைப் பயன்படுத்தியது.
  • செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ் போன்ற பல்வேறு வகையான சிக்கலான பாலிசாக்கரைடுகளை ஜீரணிக்கும் சில நுண்ணுயிர் நொதிகள் பல்வேறு கால்நடை உயிரினங்களின் குடல்களில் காணப்படுகின்றன.
  • கிளைகோசைட் ஹைட்ரோலேஸ்கள் (GH)-B2 என்பது பல்வேறு ஆய்வக நிலைகளில் இந்த உயிரிப் படலங்களை வெற்றிகரமாகச் சிதைப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்