உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கையின் 16வது பங்குதாரர்கள் மாநாடு
October 27 , 2024 27 days 105 0
உயிரியல் பன்முகத்தன்மைக்கான உடன்படிக்கையின் (CBD) 16வது பங்குதாரர்கள் மாநாடு (COP16) ஆனது கொலம்பியாவில் உள்ள காலி என்னுமிடத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் போது, பங்குதார நாடுகள் ஆனது Closing Window of Opportunity: Mapping Threats from Oil, Gas and Mining to Important Areas for Conservation in the Pantropics என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டன.
உலகின் மிகவும் சிறந்த மற்றும் மிக முக்கியமானச் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆனது எண்ணெய் பிரித்தெடுப்பு செயல்முறை சார்ந்த தொழிற்சாலைகளால் ஏற்படும் ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
முக்கியப் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகள், மனித இடையீடு எதும் இல்லாத வன நிலப் பரப்புகள், பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தத் தரவானது மொத்தப் பகுதிகளில் 18 சதவீதப் பங்கினைக் கொண்ட 518 முக்கிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் (KBA) செயலில் உள்ள மற்றும் மிகவும் சாத்தியமான எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுக்கும் வசதிகளைக் குறிப்பிட்டுள்ளது.
அமேசான் மற்றும் காங்கோ வடிநிலப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 180 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு மனித இடையீடு இல்லாத வனப் பகுதிகள் அபாயத்தில் உள்ளன.