TNPSC Thervupettagam

உயிரிழந்த பின்பு தனது உறுப்புகளை தானம் செய்தவர்கள் 2024

January 12 , 2025 10 days 83 0
  • உயிரிழந்த உறுப்பு தானம் செய்பவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்பதோடு தானம் செய்தவர்களில் 50சதவீதத்திற்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர்.
  • இத்தகைய உறுப்பு தானம் செய்த மொத்தம் 268 பேர்களில், 146 பேர் (54.48%) அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்தவர்கள் ஆவர்.
  • 2024 ஆம் ஆண்டு மாநிலத்தின் உயிரிழந்த உறுப்பு மாற்றுத் திட்டத்திற்கு அதிகபட்ச எண்ணிக்கைப் பதிவானது- 268 பேர் (218 பேர் ஆண்கள் மற்றும் 50 பேர் பெண்கள்) மற்றும் 1,500 உறுப்புகள்/திசுக்கள் பயன்படுத்தப்பட்டன.
  • தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) பல தரவுகளின் படி, தனியார் மருத்துவமனைகளில் 122 பேர் உறுப்பு தானத்திற்காகப் பதிவு செய்துள்ளனர் (45.52%).
  • உயிரிழந்த உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 156 ஆகவும், அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் 178 ஆகவும் உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்