சிஎஸ்ஐஆர் – தேசியத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-National Botanical Research Institute – CSIR/NBRI) மற்றும் லக்னோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் உள்ள ஆர்செனிக் கழிவுகளை நீக்குவதற்காக 2 உள்நாட்டு பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினர்.
இந்த 2 பாக்டீரியாக்கள் பேசிலஸ் பிலெக்ஸ் மற்றும் அசினோபாக்டர் ஜுனி என்று பெயரிடப்பட்டுள்ளன.
இவை ஆர்சனிக் கழிவுகள் உள்ள மண்ணில் உள்ள தாவரங்களின் வேர்களில் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளுதல் என்ற முறையின் கீழ் வாழ்கின்றன. இவை நச்சுத் தன்மையை ஏற்படுத்தாமல் தேவையான ஊட்டச் சத்துகளை தாவரங்கள் எடுத்துக் கொள்ள உதவுகின்றன.
மேலும் இவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
உயிரிவழிச் சீராக்கமானது மண் மற்றும் இதர சுற்றுச்சூழல்களில் கலந்துள்ள கழிவுகளை நீக்குவதற்கு நுண் உயிரிகள், தாவரங்கள், தாவர நொதிகளைப் பயன்படுத்துகின்றது.