TNPSC Thervupettagam

உயிரி-செறிவூட்டப்பட்ட கேரட்டுகள்

April 11 , 2020 1693 days 615 0
  • குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாய விஞ்ஞானியான  வல்லபாய் வஸ்தம்பாய் மர்வன்யா என்பவர் உயிரி-செறிவூட்டப்பட்ட கேரட்டுகளை உருவாக்கியுள்ளார்.
  • இந்தக் கேரட்டுகள் பொதுவாக “மதுபன் கஜர்” என்று அழைக்கப் படுகின்றன.
  • இது 277.75 மி.கி/கி.கி அளவு கொண்ட β – கரோட்டீன் மற்றும் 276.7 மி.கி/கி.கி அளவு கொண்ட இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது.
  • கேரட்டுகளின் சரிபார்த்தல் சோதனையானது தேசியப் புத்தாக்க அமைப்பினால் (NIF - National Innovation Foundation) மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது நாடு முழுவதும் கடைமட்ட நிலையிலான புத்தாக்கங்களுக்கு நிறுவன நிலையிலான ஆதரவை அளிப்பதற்காக குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப் பட்டது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்