TNPSC Thervupettagam

உயிரி பலபடிச் சேர்மங்களுக்கான செயல்விளக்க வசதி

October 20 , 2024 33 days 88 0
  • உயிரி பலபடிச் சேர்மங்களுக்கான இந்தியாவின் முதல் செயல்விளக்க மையமானது புனேவில் உள்ள ஜெஜூரியில் திறக்கப்பட்டுள்ளது.
  • பாலிலாக்டிக் அமில (PLA) உயிரி நெகிழிகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்த மையம் கவனம் செலுத்துகிறது.
  • உயிரி பலபடிச் சேர்மங்கள் என்பது கொழுப்புகள், தாவர எண்ணெய்கள் மற்றும் சர்க்கரைகள் போன்ற உயிரியல் மூலங்களிலிருந்துத் தயாரிக்கப்படுகின்றன.
  • அவை செயற்கையான பலபடிச் சேர்மங்களை விட மக்கும் தன்மை உட்பட, மண்ணில் உள்ள பாக்டீரியாவால் எளிதில் சிதைக்கப்படுதல் போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன.
  • அவற்றின் சிதைவின் போது வெளியிடப்பட்ட CO2 மாற்றுப் பயிர்களால் மீண்டும் உட் கிரகிக்கப் படலாம் என்பதால், அவை கார்பன் நடுநிலையையும் வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்