TNPSC Thervupettagam

உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள், 2024

March 16 , 2024 126 days 160 0
  • 2024 ஆம் ஆண்டு உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள் ஆனது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • பஞ்சவர்ணக்கிளி, சீனக்கிளி (கொண்டைக்கிளி) அல்லது பலவிதமான மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள் போன்ற கண்கவர் செல்லப் பிராணிகளைக் கொண்டு உள்ளவர்கள் அவற்றை மாநில வனவிலங்குத் துறையில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்த விதிகளின் கீழ் உள்ளடங்கிய இனங்கள், அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) வர்த்தகம் தொடர்பான ஒரு சர்வதேச உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • 'விலங்கு இனங்கள்' என்பது, உடன்படிக்கையின் கீழ் உள்ள உயிரினங்களை உள்ளடக்கிய ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்ட IVவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள உயிருள்ள விலங்கு இனங்களாகும்.
  • வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட மற்றும் வளர்ப்பிற்குப் பயன்படுத்த முடியாத பிற வனவிலங்குகளுக்கு என்று இந்த விதிகள் பொருந்தாது.
  • 2022 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) திருத்தச் சட்டத்தின் 49M என்ற பிரிவானது, CITES உடன்படிக்கையின் பின் இணைப்புகளில் பட்டியலிடப்பட்ட இனங்கள் மற்றும் சட்டத்தின் IV வது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட உயிருள்ள அட்டவணைப் படுத்தப்பட்ட விலங்கு இனங்களை உடைமையாகக் கொண்டிருத்தல், இடமாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான பல்வேறு விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்