உயிர் காக்கும் மருந்துகளுக்கான இறக்குமதி வரி விலக்கு
February 11 , 2025 12 days 64 0
அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 36 உயிர் காக்கும் மருந்துகளைச் சேர்க்க மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டது.
சுங்க வரியில் 5% சலுகை அளிக்கப்படும் மருந்துகளின் பட்டியலில் 6 உயிர் காக்கும் மருந்துகளைச் சேர்க்கவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டது.
மேற்கூறியவற்றை உற்பத்தி செய்வதற்காக மொத்த மருந்துகளுக்கு முறையே முழு விலக்கு மற்றும் சலுகை வரி அளிக்கப்படும்.
இந்தப் பட்டியலில் 13 புதிய நோயாளி உதவித் திட்டங்களுடன் கூடுதலாக சுமார் 37 மருந்துகளைச் சேர்க்கவும் நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டது.