வழக்கமான சோளத்தை விட அதிக அளவிலான இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்ட, பர்பானி சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உயிர் செறிவூட்டப்பட்ட சோளம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மேம்படுத்தப்பட்ட சோள வகையானது, மித வறட்சி வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (International Crops Research Institute for the Semi-Arid-Tropics - ICRISAT) உருவாக்கப்பட்டது.
இது மகாராஷ்டிராவின் வசந்தரோ நாயக் மரத்வாடா கிரிஷி வித்யாபீத் (VNMKV - Vasautrao Naik Marathwada Krishi Vidyapeeth) என்ற நிறுவனத்தால் சாகுபடிக்காக வெளியிடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட வகையான ICSR 14001 ஆனது ‘பர்பானி சக்தி’ ஆக VNMKV ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
பர்பானி சக்தி விலை குறைந்த சோள வகையாகும். நுண்ணூட்ட குறைபாட்டினை சரிசெய்வதற்கு இது ஒரு நிலையான தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பர்பானி சக்தி, ஹார்வெஸ்ட் ப்ளஸ் (Harvest Plus) என்ற சோளத்தை உயிர்செறிவூட்டல் திட்டத்தின் கீழ் ICRISAT - யினால் உருவாக்கப்பட்டது.
இது மகாராஷ்ட்ராவில் PVK1009 - ஆக சோதனை செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த சோள மேம்பாட்டுத் திட்ட சோதனையிலும் (All India Co-Ordinated Sorghum Imporvement Project - AICSIP) இது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
இது மழைக்கால பயிர்வகை (கரீஃப்) ஆக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இது மழைக்காலத்திற்கு பிறகான காலம் (ரபி) மற்றும் கோடைக்காலங்களிலும் வளரும்.