TNPSC Thervupettagam

உயிர் வாழத் தகுந்த மண்டலம் - பூமி போன்ற பெரிய அளவிலான கிரகம்

January 10 , 2020 1655 days 594 0
  • வெளிக்கோள்களை ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட ஒரு ஆய்வு செயற்கைக்கோள் (Transiting Exoplanet Survey Satellite - TESS) ஆனது உயிர் வாழத் தகுதியுள்ள பூமி போன்ற  அளவிலான "TOI 700 d" என்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
  • பூமி போன்ற அளவிலான இந்த கிரகமானது டொராடோ விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.

உயிர் வாழத் தகுந்த மண்டலம்:

  • உயிர் வாழத் தகுந்த மண்டலமானது வாழ்தகமைப் பிரதேசம் அல்லது நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள உயிர் வாழத் தகுந்த மண்டலம் (CHZ) என அழைக்கப் படுகின்றது.
  • உயிர் வாழத் தகுந்த மண்டலம் என்பது மிகவும் வெப்பமாகவும் அதிக குளிராகவும் இல்லாத ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள பகுதியாகும்.
  • நமது பூமியானது சூரியனின் உயிர் வாழத் தகுந்த மண்டலத்தில் உள்ளது.

Transiting Exoplanet Survey Satellite (TESS)

  • இது 2018 ஆம் ஆண்டில் நாசாவால் செலுத்தப்பட்ட ஒரு வான் ஆய்வுத் திட்டமாகும்.
  • பூமிக்கு அருகிலுள்ள பிரகாசமான நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வெளிக் கிரகங்களைக் கண்டறிய இது முயல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்