ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் 'ஜிங்கிங் ஜ்ரி அல்லது உயிர் வாழும் வேர்ப் பாலங்கள் (லிவிங் ரூட் பிரிட்ஜ்)' சேர்க்கப்பட்டுள்ளது.
இது மேகாலயாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் காணப்படுகிறது
இது மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமூக-கலாச்சார, சமூக மற்றும் தாவரவியல் தொடர்புகளை எடுத்துரைக்கிறது.
நீர்நிலைகளின் இருபுறமும் ‘ஃபிகஸ் எலாஸ்டிகா’ என்ற மரத்தை வளர்ப்பதன் மூலம் இந்தக் கிராம மக்கள் இந்த உயிர் வாழும் வேர்ப் பாலங்களை வளர்க்கின்றனர்.
சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வளர்ந்த இந்த மரங்கள் ஒரு பாலம் போன்ற அமைப்பினை உருவாக்குகின்றன.