TNPSC Thervupettagam

உரங்களுக்கான மானியம்

March 28 , 2020 1577 days 516 0
  • நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 1182.04 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விற்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையானது கூறியுள்ளது.
  • தற்பொழுது உரங்களை வாங்குபவர் அல்லது விவசாயிகளின் அடையாளமானது ஆதார் மூலம் அடையாளம் காணல், கிசான் கடன் அட்டை, உயிரித்தரவு அல்லது பயோமெட்ரிக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப் படுகின்றது.
  • உர நிறுவனங்களின் இந்த மானியங்கள் பயனாளிகளுக்குச் சில்லறை விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்பட்ட இரசீதுகளின் அடிப்படையில் அந்நிறுனங்களுக்கு வழங்கப் படுகின்றது.
  • உரங்களுக்கான மானியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% எடுத்துக் கொள்கின்றது. உணவுப் பொருளுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நுகர்வு இதுவாகும்.
  • யூரியா, பொட்டாஷ் உரம் மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் ஆகியவை உரங்களின் 3 முக்கியமான வகைகளாகும்.
  • இந்த அனைத்து உரங்களிடையே, யூரியா 86% பங்கைக் கொண்டுள்ளது.
  • தற்பொழுது, இந்திய அரசு யூரியாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம்) வகை உரங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்