உருது மொழியில் 'நீட்' தேர்வு: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு ஒப்புதல்
August 9 , 2017 2664 days 986 0
மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுகள் தற்பொழுது ஆங்கிலம் மற்றும் 9 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வை உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 'நீட்' தேர்வை உருது மொழியில் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
வரும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வை பிற மொழிகளைப் போல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது'நீட்' தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரிய மொழி, வங்க மொழி, அஸாமிய மொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.