இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரப் பண்பாட்டின் மிகவும் சிறந்த உதாரணம் உருது மொழி என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள படூர் நகராட்சி மன்றத்தில் உள்ள புதியக் கட்டிடத்தின் குறியீட்டுப் பலகையில் உருது பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்தக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.
மராத்தி மொழியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு அதிகாரப்பூர்வ மொழி என்று மேல்முறையீட்டாளர் தரப்பு தெரிவித்தது.
அதற்குப் பதிலளித்த நீதிமன்றம், இந்தி மொழியை இந்துக்களின் மொழியாகவும், உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகவும் கருதுவது "யதார்த்த நிலையில் இருந்து விலகுதல்" என்று நீதிமன்றம் கூறியது.
ஒரு மொழியானது தகவல் தொடர்பிற்கான ஒரு கருவி மட்டுமே அன்றி அது ஒரு மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
"மொழி என்பது மதம் அல்ல. மொழி என்பது எந்த மதத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தாது. மொழி என்பது ஒரு சமூகத்துக்கும், ஒரு பிராந்தியத்துக்கும், மற்றும் மக்களுக்கும் உரியது; ஒரு மதத்துக்குரியது அல்ல. மொழி என்பது கலாச்சாரம். மொழி என்பது ஒரு சமூகத்தின் மற்றும் அதன் மக்களின் நாகரீக வாழ்க்கையினை மதிப்பிடுவதற்கான அளவுருவாகும்".
உருது மொழி என்பது, வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதியின் சமவெளிகளின் ஒரு ஒருங்கிணைந்தக் கலாச்சாரக் கூட்டிணைவான கங்கை-ஜமுனி தஹ்சீப் அல்லது இந்துஸ்தானி தஹ்சீப்பின் மிகச் சிறந்த மாதிரியாகும்.
உருது மொழியானது அந்நிய மொழி அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது.
இது இந்தியாவில் உருவாகி வளர்க்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, இந்தியாவில் உள்ள கவிஞர்களின் விருப்ப மொழியாக மாறியது.
மராத்தி மற்றும் இந்தி ஆகியவை போன்று உருது மொழியும், இந்திய-ஆரிய மொழி ஆகும்.
இந்தி மற்றும் உருது ஆகியவை அடிப்படையில் ஒரே மொழி என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உருது முதன்மையாக நாஸ்டாலிக் எழுத்து வடிவிலும், இந்தி மொழி தேவநாகரி எழுத்து வடிவிலும் எழுதப்பட்டுள்ளது; ஆனால் கையெழுத்து வடிவம் எந்த ஒரு மொழியையும் உருவாக்காது.
மொழிகளை வேறுபடுத்துவது அவற்றின் சொற்றொடர் அமைவு, இலக்கணம் மற்றும் ஒலிப்பு வடிவமாகும்.
இந்தி மற்றும் உருது ஆகிய இரு மொழிகளின் இணைவு, இரு மொழிகளிலும் உள்ள மொழி நெறியாளர்களால் ஒரு தடையைச் சந்தித்தது என்பதோடு இந்தி மொழியானது சமஸ்கிருதமாகவும், உருது பாரசீகமாகவும் மாறியது.
சாமானியர்களின் அன்றாட இந்தி மொழிப் பயன்பாட்டில் உருது சொற்கள் நிரம்பின.
‘இந்தி’ என்ற சொல் ‘ஹிந்தவி’ பாரசீகச் சொல்லிலிருந்து வந்தது.
அரசியலமைப்பின் 345வது சரத்து வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, உருது மொழியானது பல மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களால் அவற்றின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உருதுவை அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகக் கொண்ட மாநிலங்களாகும்.
ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களான டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவையும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாய்மொழிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது 10,000க்கும் மேற்பட்ட மொழி பேசுபவர்களைக் கொண்ட தாய்மொழிகளை மட்டும் கருத்தில் கொண்டு கணக்கில் வரப்பட்டது.
இந்தியாவில் தாய்மொழிகளின் ஒரு உண்மையான எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறுவது மிகையாகாது.