May 1 , 2019
2037 days
670
- பெப்சிகோ நிறுவனமானது FC5 உருளைக் கிழங்கு வகையைப் பயிரிட்டதற்காக குஜராத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
- பெப்சிகோ நிறுவனமானது காப்புரிமை மீறுதலுக்காக அந்த விவசாயிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
- பெப்சி நிறுவனமானது தனது லேஸ் (Lay’s) உருளைக் கிழங்கு கார வகைக்காக FC5 வகை உருளைக் கிழங்குகளை பிரத்யேகமாகப் பயன்படுத்துகின்றது.
- FC5 வகை உருளைக் கிழங்கானது குறைந்த ஈரப்பதத் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
- குறைந்த ஈரப்பதத் தன்மையானது இந்த வகை உருளைக் கிழங்குகளை நொறுக்குத் தீனிகளாக மாற்றுவதை எளிதாக்குகின்றது.
- PPV & FR சட்டத்தின் கீழ் இந்தியாவில் பதிவு செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட 151 பயிர் வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்றாகும்.
தாவர வகை மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கான சட்டம்
- இந்தச் சட்டமானது 2001 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த சட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
- தாவர வகைகளின் பாதுகாப்பு
- விவசாயிகள் மற்றும் வேளாண் பயிர்களை வளர்ப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்
- புதிய வேளாண் பயிர்களைப் பயிரிடுதல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
Post Views:
670