சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் (Bank of International Settlement) நிதி நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிற்கு (Financial Stability Institute Advisory Board) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி ஒரு உலகளாவிய நிதி அமைப்பு ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள முதன்மையான மத்திய வங்கிகளின் உடைமையாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரத்தில் அமைந்துள்ளது.
இதன் பொதுமேலாளர் ஜெய்மே கேருவனா (Jaime Caruana) இந்த புதிய ஆலோசனைக் குழுவின் தலைவராவார்.
இந்த வங்கியின் நிதி நிலைத்தன்மைக்கான நிறுவனம் உலகம் முழுவதும் நிதித் துறை அதிகாரிகளுக்கு அவர்களது நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு உதவும்.
இந்த நிலைத்தன்மை நிறுவனம் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி மற்றும் வங்கிகளின் மேற்பார்வைகளுக்கான பசேல் குழு ஆகியவற்றால் 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது உலகம் முழுவதும் பல்வேறு துறைகளுக்கிடையே மேற்பார்வையிடுதலுக்கான தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்திட உதவும்.
இந்த ஆலோசனைக் குழுவிற்கான உறுப்பினர்களுள் உர்ஜித் படேலோடு சேர்த்து, நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் வில்லியம் டூட்லி, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள மூத்த வங்கியாளர்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.