தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாட்டில் அதிக அளவிலான உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இத்தகைய சான்று தேசிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. (NOTTO – National Organ and Tissue Transplant Organisation).
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தியாவிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
”டிரான்ஸ்டன்” (TRANSTAN – Transplant Authority of Tamilnadu) என்றழைக்கப்படும் இந்த ஆணையம் தமிழ்நாட்டின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட தன்னாட்சி உடைய தனி ஆணையமாகும்.