TNPSC Thervupettagam
August 7 , 2024 108 days 213 0
  • தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆனது, 14வது இந்திய உறுப்பு தான தின விருது விழாவினை ஏற்பாடு செய்தது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஜீவந்தன் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் K.இராம்பாபு என்பவர் ஜீவந்தன் விருதைப் பெற்றார்.
  • சண்டிகரில் உள்ள பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (ROTTO) வடக்குப் பிரிவு PGIMER நிறுவனமானது சிறந்த ROTTO விருதை வென்றது.
  • தெலுங்கானா சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு  (SOTTO)/சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதைப் பெற்ற அதே சமயம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டாவது சிறந்த SOTTO/சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான விருதைப் பெற்றன.
  • மணிப்பூர் மாநிலமானது, வடகிழக்கு மாநிலங்களில் சிறந்த முன்னணித்துவம் பெறும் மாநிலம் என்ற விருதினைப் பெற்றது.
  • உறுப்பு தானத்தில் முன்னணித்துவம் பெறும்  மாநிலங்கள் பிரிவில் விருது பெற்ற மாநிலங்கள்: 1) ஆந்திரப் பிரதேசம் 2) மத்தியப் பிரதேசம் மற்றும் 3) ஜம்மு & காஷ்மீர்.
  • சிறந்த மாற்று அறுவை சிகிச்சை சாராத உறுப்பு மீட்பு மையங்களுக்கான விருது (NTORC) அகமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
  • செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையானது, உயிரிழந்தவர்களால் அதிக எண்ணிக்கையில் உறுப்பு தானம் பதிவு செய்த சிறந்த தனியார் துறை மருத்துவமனை விருதினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்