TNPSC Thervupettagam

உறைந்த நிலையில் பவளப் பாறைகள்

December 22 , 2022 709 days 362 0
  • உலகிலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில், ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்புப் பவளப்பாறையை வெற்றிகரமாக அறிவியலாளர்கள் உறையச் செய்தனர்.
  • பெருந்தடுப்புப் பவளப்பாறையானது, கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு வெளிர்தல் நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அறிவியலாளர்கள் பவளப் பாறைகளைப் பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  • உலகில் முதல்முறையாக பெருந் தடுப்புப் பவளப்பாறையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வகச் சோதனையில் அறிவியலாளர்கள் பவளப் பாறைகளை உறைய வைப்பதற்கு கிரையோமெஷ் என்ற வலையினைப் பயன்படுத்தினர்.
  • கிரையோமெஷ் என்ற பிரத்தியேகமாக புனையப்பட்ட ஒரு வலையானது, கிரையோ ப்ரெசர்வேஷன் என்ற குளிரூட்டும் முறையில் ஓர் அடித்தள மூலக்கூறாகப் பயன் படுத்தப் படுகிறது.
  • ‘கிரையோமேஷ்’ என்பது ஓர் இலகுரக மற்றும் மலிவாக தயாரிக்கப்படக்கூடிய வலை ஆகும்.
  • இது பவளப் பாறைகளை சிறந்த முறையில் பாதுகாக்கச் செய்வதோடு, குளிரூட்டல் பண்புகளையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்