ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (SEI), பருவநிலைப் பகுப்பாய்வு அமைப்பு, E3G அமைப்பு, சர்வதேச நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IISD) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.
திட்டமிடப்பட்ட புதைபடிவ எரிபொருள் உற்பத்தியானது 1.5°C வெப்பநிலை உயர்வுக்கான வரம்புகளை 110% ஆகவும், 2°C உயர்வுக்கு 69% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்படியான உற்பத்தியை மேற்கொள்ளும் நாடுகள் வெப்பநிலை உயர்வினை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் கட்டுப்படுத்தும் வகையில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைப்பதற்கு உறுதியளிக்கவில்லை.
20 முக்கிய உற்பத்தி நாடுகளானது, உலகின் புதைபடிவ எரிபொருள் விநியோகத்தின் மொத்த உற்பத்தியில் 82% மற்றும் நுகர்வில் 73% பங்கினை கொண்டுள்ளன.
பல நாடுகள் ஏரிவாயுவை ஒரு “இணைப்பு” அல்லது “மாற்றத்திற்கான” எரிபொருளாக முன்வைக்கின்றன, ஆனாலும் அதிலிருந்து மாறுவதற்கான வெளிப்படையான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.