மே 23 அன்று உலகக் கடல் ஆமை தினம் அனுசரிக்கப்பட்டது.
இது அமெரிக்க ஆமை மீட்பு (ATR - American Tortoise Rescue) நிறுவனத்தினால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ATR அமைப்பானது அனைத்து விதமான ஆமைகள் மற்றும் கடல் ஆமை இனங்களின் மீட்பு, மறுவாழ்வு, தத்தெடுப்பு மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றது.
இத்தினமானது உலகெங்கிலும் அழிந்து வரும் கடல் ஆமைகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் அவற்றைக் கொண்டாட மக்களுக்கு உதவவும் ஒரு வருடாந்திர அனுசரிப்பாக ஏற்படுத்தப்பட்டது.